சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம், ஏப்.30-
திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 22). கூலி தொழிலாளியான இவர் திருச்சியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து, கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் தனியாக அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த பெற்றோர் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story