திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு 700 புதிய இருக்கைகள்


திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு 700 புதிய இருக்கைகள்
x
தினத்தந்தி 29 April 2021 7:00 PM GMT (Updated: 29 April 2021 7:00 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு 700 புதிய இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளன.


செம்பட்டு, ஏப்.30-
திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடி செலவில் புதிய முனையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பாடு அதிகம் உள்ள காரணத்தினால் பயணிகள் அமர்வதற்காக சுமார் 700 புதிய இருக்கைகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை இருக்கைகள் கொரோனா காலங்களில் இருக்கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story