நெல்லையில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் திறப்பு
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
சைபர் கிரைம் போலீஸ் நிலையம்
நெல்லை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ‘ரிப்பன்’ வெட்டி போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
புகார் அளிக்கலாம்
பொதுமக்களுக்கு கணினியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன்மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) சைபர் கிரைம் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு பொதுமக்கள் வங்கி மோசடி, ஆன்லைன் மோசடி, ஆன்லைன் விளையாட்டு மோசடி உள்ளிட்ட ஆன்லைன் குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
நடவடிக்கை
சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது, சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story