2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு


2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 30 April 2021 12:40 AM IST (Updated: 30 April 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இட்டமொழி, ஏப்:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகப்பேரியை அடுத்த லெத்திகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர்கள் சுப்பையாதாஸ், செல்வகுமார். இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சுப்பையாதாஸ், அவரது மனைவி சாந்தி, அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன், ஆனையப்பபுரத்தைச் சேர்ந்த மாடசாமி உள்பட 8 பேர் சென்று, செல்வகுமார் வீட்டை தாக்கி அவரது மனைவி வசந்தி, தாயார் லட்சுமி ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாதாஸ், சாந்தி உள்பட 8 பேரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story