மானூர் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளால் சுகாதாரக்கேடு
மானூர் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
மானூர், ஏப்:
தமிழகமெங்கும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில், கொரோனாவின் இரண்டாவது அலையில் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மானூர் அருகே நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள குவாரி பகுதியில், சாலையோரம் உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணிகள், முக கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் மர்ம நபர்களால் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, ஆங்காங்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் இதற்கு சுகாதார துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story