நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 298 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 15,645 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 298 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 15,645 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 April 2021 12:57 AM IST (Updated: 30 April 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 15,645 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த 7 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 347 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் திருச்செங்கோடு நகராட்சி மேற்பார்வையாளர், அரசு பஸ் கண்டக்டர் உள்பட முதல் முறையாக அதிகபட்சமாக 298 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,645 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 296 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 837 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 120 பேர் இறந்து விட்ட நிலையில், 1,688 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ நெருங்குவதாலும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story