2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை


2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2021 1:21 AM IST (Updated: 30 April 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரை சேர்ந்தவர் இஸ்மத். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சபியா (வயது 27). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சபியா, வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு அக்கம், பக்கத்தினர் ஓடிச்சென்று, தீயை அணைத்து சபியாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சபியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபியாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா? என்பது பற்றி பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story