மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான சேவை நடைபெறும்


மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான சேவை நடைபெறும்
x
தினத்தந்தி 30 April 2021 1:33 AM IST (Updated: 30 April 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான சேவை நடைபெறும் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்

மதுரை
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மதுரை விமான நிலையம் மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான சேவை நடைபெறும் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-ம் அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், சர்வதேச நாடுகளுக்கான விமான சேவையையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதற்கிடையே பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான 6 சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், மதுரை விமான நிலையத்தில் குறைந்த அளவிலான விமான சேவைகளே நடந்து வருகிறது. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விமான சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறியதாவது:-
விமான சேவை
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், முழு நேரம் விமான சேவைகள் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 14 நாட்களுக்கு காலை நேர விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் நடைபெறும். அதற்கு ஏற்றார்போல் விமான நேரம் மாற்றி அமைக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் காலை நேரத்தில் இயக்கப்படும் 2 விமான சேவைகள் மட்டுமே தடைபடும். மற்ற அனைத்து விமான சேவைகளும் சீராக நடைபெறும். வரும் காலங்களில் கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் கூடுதல் விமான சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story