வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 30 April 2021 1:33 AM IST (Updated: 30 April 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே மதுபோதையில் வாலிபரை அடித்துக்ெகான்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்

திருமங்கலம்
திருமங்கலம் அருகே மதுபோதையில் வாலிபரை அடித்துக்ெகான்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் தகராறு
திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளம் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பெரியகருப்பன்(வயது 35). தந்தை, மகன் இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சிலநேரங்களில் போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதும் வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு 2 பேரும் மது அருந்திவிட்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரமடைந்த முருகேசன், மகன் என்றும் பாராமல் பெரிய கருப்பனை கம்பால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பெரிய கருப்பனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கீழே தவறி விழுந்ததில் காயம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
கொலை
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தந்தை முருகேசன் மதுபோதையில் பெரியகருப்பனை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகசேனை கைது செய்தனர். 
கொலை செய்யப்பட்ட பெரியகருப்பனுக்கு இருளாய் என்ற மனைவியும், விஜயன் என்ற மகனும் உள்ளனர்.

Next Story