நாகர்கோவில்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தம்
நாகர்கோவில்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தம்
மதுரை
சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதன்படி, நாகர்கோவில்-சென்னை வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06063/06064) இருமார்க்கங்களிலும் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி வரை தாம்பரம் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் வழக்கமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
Related Tags :
Next Story