முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
2-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சிவகாசி,
2-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முகவர்களுக்கு கொேரானா பரிசோதனை செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரியில் எண்ணப்படுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பரிசோதனை
இந்தநிலையில் அதிகாரிகள், முகவர்கள், பத்திரிகையாளர் களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிவகாசி ஜானகி அம்மாள் மகப்பேறு நிலையத்தில் நேற்று காலை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாமில் ஏராளமான முகவர்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் என 432 பேர் கலந்து கொண்டு மாதிரிகளை கொடுத்தனர்.
சிறப்பு முகாமை சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். மாதிரி கொடுக்க வந்தவர்களை சமூக இடைவெளியுடன் நின்று கொடுக்க வலியுறுத்தினார். அப்போது சுகாதாரத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் மருத்துவக்குழுவினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story