ஆலங்குளம் அருகே கல்குவாரியில் வெடி வெடித்ததில் வீடு சேதம்
ஆலங்குளம் அருகே கல்குவாரியில் வெடி வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது.
ஆலங்குளம், ஏப்:
ஆலங்குளம் அருகே ஆண்டிபட்டி ஊருக்கு மேல்புறம் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியில் அடிக்கடி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று மதியம் குவாரி ஊழியர்கள் பாறையை தகர்க்க வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி வெடித்து பாறை சிதறியதில் சுமார் 10 கிலோவுக்கும் மேல் எடையுள்ள கல் ஒன்று குவாரிக்கு அருகே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்சாமி என்பவரது ஓட்டு வீட்டில் பயங்கரமாக விழுந்தது. அந்த வீடு கட்டை குத்திய வீடு என்பதால் அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தாசில்தார் பட்டமுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடியிருப்பு அருகே குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story