ஒரே நாளில் 958 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 958 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 860 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 98 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 958 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 567 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 48 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 615 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 31 ஆயிரத்து 689 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி ஆயிரத்து 587 பேருக்கு என மொத்தம் 33 ஆயிரத்து 276 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 940 கோவிஷீல்டு தடுப்பூசியும், ஆயிரத்து 10 கோவேக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
Related Tags :
Next Story