புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல்


புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல்
x
தினத்தந்தி 30 April 2021 2:30 AM IST (Updated: 30 April 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் செயல்பட தமிழக அரசு தடை விதித்து உள்ளது. 
அதன்படி புஞ்சைபுளியம்பட்டியில் 2 ஜவுளிக்கடை மற்றும் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் ஆகியவைகளை மூட வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜவுளிக்கடைகள், இரு சக்கர வாகன விற்பனை நிலையம் ஆகியவை மூடப்பட்டது. 
இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள ஜவுளிக்கடை நேற்று வழக்கம் போல் செயல்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்த ஜவுளிக்கடையை நில வருவாய் அலுவலர் யோக நரசிம்மன் தலைமையில் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story