பிரகாஷ் ராதோட் எம்.எல்.சி.க்கு கொரோனா
பிரகாஷ் ரதோடு எம்.எல்.சி. கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் ரதோட் எம்.எல்.சி.யும், அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ரதோட் எம்.எல்.சி.க்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரகாஷ் ராதோட் எம்.எல்.சி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். அவரது மனைவியும், மின்டோ ஆஸ்பத்திரி இயக்குனருமான டாக்டர் சுஜாதாவுக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
தங்களை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு ேமற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சித்தராமையா...
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்த நிலையில் அவர் நேற்று 2-வது டோஸ் தடுப்பூசியை பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் போட்டுக் கொண்டார். அப்போது ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் உடன் இருந்தனர்.
ஆசிரியர்கள் சாவு
துமகூரு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு துமகூரு மாவட்டம் குனிகல்லில் 3 ஆசிரியா்கள் பலியான பரிதாபம் நடந்துள்ளது. குனிகல் தாலுகாவை சேர்ந்தவர் சிவராமேகவுடா.
இவர், உஜ்ஜனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமேகவுடாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவராமேகவுடா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
இதுபோல், அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த பரமேஸ்வர் மற்றும் கிருஷ்ணப்பா ஆகிய 2 பேரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். குனிகல்லில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story