சேலத்தில் கட்டுப்பாட்டுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு


சேலத்தில் கட்டுப்பாட்டுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு
x

சேலத்தில் கட்டுப்பாட்டுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

சேலம்:
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு போடப்பட்ட கொரோனா ஊரடங்கு காலத்தில் சவரத் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த 26-ந் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்படும் சலூன் கடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இது சவரத் தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகளுடன் கடைகளை நடத்த அனுமதித்தது போல, சலூன் கடைகளுக்கும் உரிய கட்டுப்பாடுடன் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமாவது திறக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story