இறப்பிலும் இணை பிரியாத தம்பதி; மனைவியின் இறுதி சடங்கில் கணவரும் சாவு- அம்மாபேட்டை அருகே நெகிழ்ச்சி சம்பவம்


இறப்பிலும் இணை பிரியாத தம்பதி; மனைவியின் இறுதி சடங்கில் கணவரும் சாவு- அம்மாபேட்டை அருகே நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 30 April 2021 4:13 AM IST (Updated: 30 April 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே மனைவியின் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த அவருடைய கணவரும் உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத இந்த தம்பதியின் சாவு அந்த பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே மனைவியின் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த அவருடைய கணவரும் உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத இந்த தம்பதியின் சாவு அந்த பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள நாகப்பன் தோட்டத்தை சேர்ந்தவர் சி.குழந்தையப்பன் (வயது 78). முதுகலை பட்டதாரி ஆசிரியரான இவர் ஒலகடம், சென்னம்பட்டி, குருவரெட்டியூர் ஆகிய பகுதி அரசு மேல்நிலை பள்ளிக்கூடங்களில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார். இவருடைய மனைவி சம்பூரணம் (70). இவர்களுக்கு லெனின், சக்திவேல் என்ற இரு மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ஓய்வுக்குப் பிறகு இவர் தனது தோட்டத்தை கவனித்து வந்தார். குழந்தையப்பனும், சம்பூரணமும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்து உள்ளனர். 
சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மாரடைப்பால் சம்பூரணம் இறந்துவிட்டார். இதனால் குழந்தையப்பன் துக்கத்தால்        மனமுடைந்து காணப்பட்டார். 
இதனிடையே சம்பூரணம் மறைவையொட்டி இறுதி சடங்குகளுக்கான நிகழ்ச்சிகள் நேற்று பகல்  11 மணி அளவில் நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையப்பன் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அவரை குடும்பத்தினர் மீட்டு குருவரெட்டியூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு ெசன்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதையடுத்து அவரின் உடல் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களும் அவர்களுடைய ேதாட்டத்திலேேய அருகருகே அடக்கம் செய்யப்பட்டன. சாவிலும் இணை பிரியாத இந்த தம்பதியின் இறப்பு அந்த பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story