ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை- அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்தது


ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை- அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்தது
x
தினத்தந்தி 30 April 2021 4:33 AM IST (Updated: 30 April 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் ஊரடங்கு நாளில் அறிவிக்கப்படுகிறது. 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை மிகவும் பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. 
அதன்படி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மற்றும் அனைத்து வகை தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.  கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்று பெற வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
கொரோனா பரிசோதனை
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள், பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.
ஈரோட்டில், பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. 
இதில் அதிகாரிகள், பணியாளர்கள் என ஏராளமானவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டது.

Next Story