‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: கோபி புதிய ஆஸ்பத்திரி ரோட்டில் தோண்டப்பட்ட குழி சரி செய்யப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: கோபி புதிய ஆஸ்பத்திரி ரோட்டில் தோண்டப்பட்ட குழி சரி செய்யப்பட்டது
கோபி
கோபி கச்சேரிமேடு பகுதியில் இருந்து புதிய அரசு ஆஸ்பத்திரி செல்ல ஒரு ரோடு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பிறகு இந்த குழி முறையாக மூடப்படவில்லை. இதனால் ரோடு குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. எனவே இந்த ரோட்டை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
இதைத்தொடர்ந்து கோபி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமசாமி முன்னிலையில் ரோட்டில் குழியாக கிடந்த இடத்தில் மண் போட்டு டிராக்டர் மூலம் சமன்படுத்தும் பணி நடந்தது.
Related Tags :
Next Story