தம்மம்பட்டியில் வீட்டு சுவரில் கார் மோதி விபத்து
தம்மம்பட்டியில் வீட்டு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி நடுவீதியில் வசிப்பவர் சுந்தரராஜன் மகன் இளவரசன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கியபோது, சாலையின் எதிர்புறம் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு இளவரசனின் வீட்டு சுவரில் இடித்து நின்றது. அதில் இளவரசனின் மோட்டார்சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தது கொக்காங்காட்டை சேர்ந்த முத்துசாமி (50) என்பது தெரியவந்தது. வீட்டின் மீது கார் மோதியது பற்றி தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story