திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2021 9:17 AM IST (Updated: 30 April 2021 9:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி இணைந்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினார்கள்.

திருவள்ளூர்,

இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அறிவுரைகளை வழங்கினார்.

அவருடன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story