தமிழக கவர்னர் அறிவுறுத்தலின்பேரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது


தமிழக கவர்னர் அறிவுறுத்தலின்பேரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது
x
தினத்தந்தி 30 April 2021 11:22 AM IST (Updated: 30 April 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களிடையே காணொலி காட்சி வாயிலாக கொரோனா நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாணவர்கள் சக்தியே மிகப்பெரிய சக்தி. எனவே பல்கலைக் கழகங்கள் தங்கள் மாணவர்கள் மூலம் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு நடத்தி அரசுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அந்தவகையில் தமிழக கவர்னரின் அறிவுறுத்தலை உடனடியாக ஏற்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழக என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் கடந்த 24-ந்தேதி முதல் வேடம் அணிந்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தரமணி பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story