உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து
உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் சித்திரை பூஜை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று மார்ச் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்கும். ஆனால் கோரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால்இங்கும் சித்திரை பூஜை திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் ஆடு, கோழி, ஆத்தி போன்றவற்றை நேமிசங்கள் படைக்கவும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை. அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் யாருக்கும் கோவில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. கோவில் உள்ளே செல்லும் பாதைகள் முழுமையாக அடைக்கப்பட்டு விட்டன. ஆனால் கோவிலில் நடக்கும் திருவிழா சிறப்பு பூஜைகள் அனைத்தும் பக்தர்கள் இல்லாமல் நடக்கிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story