பள்ளிகொண்டா அருகே கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பள்ளிகொண்டா அருகே கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
அணைக்கட்டு
பள்ளிகொண்டாரை அடுத்த அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி எழிலை அழைத்துக்கொண்டு வேலூர் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள், எழில் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ்நிலையத்தில் சேட்டு புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணை நடத்துவதாக கூறி அனுப்பி வைத்தனர்.
அதேபோல் மாதனூரில் இருந்து வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த வாலிபரிடம நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story