புனே அருகே பெண்களின் நடனத்துடன் மதுவிருந்து 9 பேர் கைது


புனே அருகே பெண்களின் நடனத்துடன் மதுவிருந்து 9 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 8:05 PM IST (Updated: 30 April 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விதியை மீறி மதுவிருந்து நடந்து வருவதாக உத்தம்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

புனே, 

புனே அருகே குட்ஜே கிராமத்தில் லேப்டே என்ற கேளிக்கை விடுதியில் கொரோனா தடுப்பு விதியை மீறி மதுவிருந்து நடந்து வருவதாக உத்தம்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் மும்பையை சேர்ந்த சில பெண்களை அங்கு வரவழைத்து அதிக ஒலியுடன் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடிய படியும், நடனமாடிய பெண்களுக்கு பணநோட்டுகளை வீசியும் மது விருந்தை கொண்டாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மதுவிருந்து ஏற்பாடு செய்த கேளிக்கை விடுதியின் மேலாளர் சமீர் பைகுடே (வயது39) என்பவரை கைது செய்தனர். மேலும் 5 நடன பெண்கள் உள்பட 8 பேரும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் பிடிபட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் நடன பெண்களுடன் மதுவிருந்து நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story