மர்ம நோய் தாக்கி 3 மாடுகள் பலி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மர்ம நோய் தாக்கி 3 மாடுகள் பலியாகின.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி ஊராட்சி தெப்பக்குளத்துபட்டியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி.
இவர் 2 பசு மாடுகள் வளர்த்து வந்தார். அந்த மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கியதில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் அதே ஊரை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடைய பசு மாட்டிற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனே அழகுபட்டி கால்நடை மருத்துவமனை டாக்டர் வரவழைக்கப்பட்டு பசுமாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த 3 பசு மாடுகளும் நேற்று பரிதாபமாக இறந்தது.
பசு மாடுகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.
அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கால்நடை டாக்டர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story