உடுமலையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, நகை,பணத்திற்காக 2 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை வாய்க்கலில் வீசி சென்றதாக கைதான சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேர் போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


உடுமலையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, நகை,பணத்திற்காக  2 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை வாய்க்கலில் வீசி சென்றதாக கைதான சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேர்  போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 30 April 2021 9:32 PM IST (Updated: 30 April 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, நகை,பணத்திற்காக 2 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை வாய்க்கலில் வீசி சென்றதாக கைதான சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேர் போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மடத்துக்குளம்
உடுமலையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, நகை,பணத்திற்காக  2 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை வாய்க்கலில் வீசி சென்றதாக கைதான சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேர்  போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 பெண்கள் கொலை
திருப்பூர் மாவட்டம்  உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி  கீர்த்தனா (வயது 40). இவருடைய தொழி உடுமலை இந்திரா நகரை சார்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோகிலாமணி (45). இவர்கள் 2 பேரும் கடந்த 27-ந் தேதி இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்களுடைய உடல்கள் காரத்தொழுவு பகுதியில் அமராவதி கிளைவாய்க்கால் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து வீசப்பட்டு கிடந்தன. கீர்த்தனாவின் காலில் சிறாய்ப்பு காயம் இருந்தது. நிர்வாண நிலையில் கிடந்த கோகிலாமணியின் நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தது. 
எனவே மர்ம ஆசாமிகள் இவர்கள் இருவரையும் கொலை செய்து உடல்களை வாய்க்கால் பகுதியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த  தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது  2 பெண்களின் வீ்ட்டிற்கு யார் யார்? அடிக்கடி வந்து செல்வார்கள் என்று விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் அடிக்கடி 2 பேர் கோகிலாமணி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. 
2 பேர் கைது 
இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கோகிலவாணியின் வீட்டிற்கு அடிக்கடி சரக்கு ஆட்டோவில் வந்தவர்கள் குறிச்சிக்கோட்டையை சேர்ந்த  குழந்தைவேலு (42), மற்றும் அவருடைய நண்பர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த  குமார் (45) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். 
விசாரணையில் சரக்கு வாகன டிரைவர் குழந்தைவேலுவும், குமாரும் சேர்ந்து அந்த பெண்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் குழந்தைவேலு போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு  வாக்குமூலம் வருமாறு:-
பனியன் நிறுவனத்தில் வேலை 
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அப்போது அதே நிறுவனத்தில்  ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த குமார் என்பவரும் வேலைசெய்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். நாங்கள் இருவரும் பெண்களுடன் தனியாக இருக்க ஆசைப்படுவோம். இதற்காக பல்வேறு புரோக்கர்களை தொடர்பு கொண்டு தனிமையில் இருக்க பெண்கள் கிடைப்பார்களா? என்று கேட்போம். அவர்கள் கொடுக்கும் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும்போது, எதிர்முனையில் பேசும் பெண்கள், எங்களை வரச்சொல்வார்கள். அதன்படி நாங்கள் அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று உல்லாசமாக இருப்போம். 
தற்போது நாங்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் செல்போனில் தொடர்பு வைத்திருந்தோம். அதன்பின்னர் நான் சொந்தமாக சரக்கு வாகனம் வாங்கி ஓட்டி வந்தேன். 
புரோக்கர் மூலம் பழக்கம்
இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் ஒரு புரோக்கர் மூலம் கீர்த்தானா, கோகிலாமணி ஆகியோரின் பழக்கம் கிடைத்தது.  அதை தொடர்ந்து நாங்கள் இருவரும் அந்த பெண்களின் வீட்டிற்கு சென்று  தனிமையில் இருந்து வருவோம். இந்த பழக்கம் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்தது.  கீர்த்தனாவும், கோகிலா மணியும் மிகவும் ஆடம்பரமாக இருந்தார்கள். இதனால் அவர்கள் வசதியானவர்கள் என்று முடிவு செய்தோம். எனவே அவர்கள்  2 பேரிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தால் பணக்காரர்களாக ஆகி விடலாம் என்று திட்டம் தீட்டினோம். 
அதன்படி கடந்த  27-ந் தேதி  இரவு நானும், குமாரும் சரக்கு ஆட்டோவில்  கீர்த்தனா வீட்டிற்கு சென்றோம். அங்கு கீர்த்தனா இருந்தார். அவரை அழைத்துக்கொண்டு கோகிலாமணி  வீட்டிற்கு வந்தோம். பின்னர்  நானும் கோகிலாமணியும் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் குமாரும், கீர்த்தனாவும் உல்லாசமாக இருந்தோம். நள்ளிரவு ஆனதும் நான் திடீரென்று கோகிலாமணியை மிரட்டி, “ உன்னிடம் உள்ள நகை, பணத்தை கொடு” என்றேன். 
கழுத்தை நெரித்து கொன்றோம்
ஆனால் அவர் என்னிடம்  நகை, பணம் எதுவும் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், கோகிலாமணியை துண்டால் கழுத்தை நெரித்தேன். இதில் அவர் அலறினார். அப்போது மற்றொரு அறையில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்த குமாரும், கீ்ர்த்தானாவும் எழுந்து நாங்கள் இருக்கும் அறைக்கு ஓடி வந்தனர். அப்போதுநான் குமாருக்கு கண்ணால் ஜாடை காட்டினேன். அவர் புரிந்து கொண்டார். பின்னர் நானும், குமாரும் சேர்ந்து கோகிலாமணியின் கழுத்தை நெரித்து கொன்றோம். பின்னர் கீர்த்தானாவின் கழுத்தையும் நெரித்து கொல்ல முயன்றோம். அவர் திமிறினார். இதனால் அவரை தள்ளி விட்டதில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரையும் கழுத்தை நெரித்து க்கொன்றோம்.
 பின்னர் நாங்கள் உல்லாசமாக இருந்த அறையில் பணம் எதும் உள்ளதா?  என்று தேடிபார்த்தோம். எதுவும் இல்லை. இதையடுத்து கீர்த்தனாவின் காதுகளில்  இருந்த தோடுகளை கழற்றினோம்.
வாய்க்காலில் பிணங்கள் வீச்சு
 கோகிலாமணி யின் உடலை பிளக்ஸ் பேனரில் அப்படியே சுற்றினோம். பின்னர் கீர்த்தனாவின் உடலை மற்றொரு பிளக்ஸ் பேனரில் சுருட்டினோம். இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால் எங்களுக்கு வசதியாக போனது. தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் இ்ல்லை. பின்னர் இருவரது உடலையும், சரக்கு ஆட்டோவில் ஏற்றி, காரத்தொழுவு அருகே அமராவதி கிளை வாய்க்காலில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் வீசி சென்றோம். காலையில் நாங்கள் கொண்டு வந்த தோடு விற்கலாம் என்று முடிவு செய்தபோது அது கவரிங் என்று தெரியவந்தது. 
கோகிலா மணி மற்றும் கீர்த்தனாவின் ஆடம்பரத்தை பார்த்தும், அவர்களின் கவர்ச்சியை பார்த்தும், அவர்களின் வீட்டில் குளிர்சாதனவசதி இருப்பதால் அவர்கள் இருவரும் வசதியானர்கள் என்றும், அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை கொள்ளையடித்தால் பணக்காரர்கள் ஆகி விடலாம் என்றும் நம்பினோம். ஆனால் அவர்கள் அணிந்து இருந்த நகையே கவரிங் என்று அவர்களை கொலை செய்த பிறகுதான் தெரியவந்தது.   இந்த நிலையில் சரக்கு ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து எங்களை போலீசார் கைது செய்து விட்டனர். 
இவர் குழந்தைவேலு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


Next Story