தூசி அருகே டிராக்டர் திருடிய கல்லூரி மாணவர் கைது
தூசி அருகே டிராக்டர் திருடிய கல்லூரி மாணவர் கைது
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 38). இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் தனக்கு சொந்தமான டிராக்டரை விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இதுகுறித்து பச்சையப்பன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா தோணிமேடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் கல்லூரி மாணவன் பக்தவச்சலம் (20) என்பவர் டிராக்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாணவர் பக்தவச்சலத்தை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story