குமரலிங்கத்தையடுத்த கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குமரலிங்கத்தையடுத்த கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 30 April 2021 9:43 PM IST (Updated: 30 April 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கத்தையடுத்த கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
குமரலிங்கத்தையடுத்த கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விறகுத் தேவை
மரம் வளர்ப்போம் என்று குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கும் மரமாக சீமைக் கருவேல மரம் உள்ளது.இவற்றை அகற்ற வேண்டும் என்ற குரல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உரக்க ஒலித்த நிலையில் படிப்படியாக மங்கி மறைந்து விட்டது.சீமைக் கருவேல மரங்களுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத் தக்கது. இந்தநிலையில் கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- விறகுத் தேவைக்காக வெளி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. இதன் இலைகள் மற்றும் காய்களை கால்நடைகள் உணவாக்கிக் கொள்கின்றன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல இடங்களிலும் இந்த சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகின்றன. இதன் காய்கள் மற்றும் பழங்களை யானைகள் விரும்பி சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இதன் விதைப்பரவல் எளிதாகிறது. தற்போது பல நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வளர்ந்து வரும் சீமைக் கருவேல மரங்களின் விதைகள் தண்ணீரின் மூலம் எளிதாகப்பரவி பல இடங்களிலும் இந்த மரங்கள் பல்கிப்பெருகி வருகிறது. ஆரம்ப காலங்களில் பொதுமக்களின் விறகுப் பயன்பாட்டுக்கு இந்த மரங்கள் பெரிதும் கைகொடுத்தது. அதேநேரத்தில் விறகு பயன்பாட்டுக்காக அடிக்கடி வெட்டப்படுவதால் இதன் வளர்ச்சியும் கட்டுக்குள் இருந்தது. ஆனால் காலப்போக்கில் கியாஸ் அடுப்பு, மின்சார அடுப்பு, மின் காந்த அடுப்பு என பலவகையான அடுப்புகள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு விறகு அடுப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை சொற்பமாகி விட்டது. இதனால் சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. தற்போது கரி உற்பத்தி மட்டுமே சீமைக்கருவேல மரங்களைச் சார்ந்த தொழிலாக உள்ளது.
சமூக விரோத செயல்கள்
தற்போது கொழுமம் அமராவதி ஆற்றின் கரையில் அதிக அளவில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்கிறது. புதர் போல வளர்ந்திருக்கும் இந்த சீமைக் கருவேல மரங்களுக்கு அடியில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஒருசிலர் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த மரங்களிலிருந்து காய்ந்து விழும் முட்கள் அமராவதி ஆற்றில் பரவிக் கிடக்கிறது. இதனால் ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள் முட்கள் குத்தி காயமடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதாகக் கூறப்படும் சீமைக் கருவேல மரங்களால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். இந்த மரங்கள் ஆக்கிரமித்து வளர்வதால் நன்மை தரக்கூடிய மற்ற வகை செடிகளோ, மரங்களோ இந்த பகுதியில் வளர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த மரத்தின் பழங்கள் ஆற்றில் விழுந்து நீரோட்டத்தில் பயணம் செய்வதால் அனைத்து ஊர்களிலும் ஆற்றங்கரைகளை முழுமையாக சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்றி விட்டு ஆற்றங்கரைகளில் பயன்தரும் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story