அரூர் அருகே ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு


அரூர் அருகே ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 30 April 2021 9:47 PM IST (Updated: 30 April 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே ஓடையில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள  ஆலமரத்துவளவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகன் மொழியழகன் (வயது 7). இவன் கலசப்பாடி அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில்  1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சிறுவன் மொழியழகன் நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள ஓடைக்கு சென்று குளித்தபோது தண்ணீரில் மூழ்கினான். அக்கம், பக்கத்தினர் அவனை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story