மதுபாட்டில்கள் பறிமுதல்; 16 பேர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல்; 16 பேர் கைது
பேரையூர்
டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, பேரையூர், சாப்டூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மீனாட்சிபுரத்தை சேர்ந்த காமராஜ்(வயது 56) விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களையும், டி.கல்லுப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்களும், கணவாய்பட்டியை சேர்ந்த ஒச்சாதேவர் என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களையும், சந்தையூரை சேர்ந்த முருகன் என்பவரிடமிருந்து 12 மதுபாட்டில்களையும், சாப்டூரை சேர்ந்த ராமர் என்பவரிடம் இருந்த 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
சோழவந்தான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 103 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோழவந்தான் அருகே காடுபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த 6 ேபரை கைது செய்து அவர்களிடம் இருந்து 148 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story