வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 30 April 2021 9:58 PM IST (Updated: 30 April 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு திருட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

மதுரை
மதுரை மேலபொன்னகரம் 7-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 36). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்ததுடன் வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story