உடுமலையில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்ததால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான 10 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
உடுமலையில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்ததால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான 10 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை,
உடுமலையில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்ததால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான 10 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
பஸ் பயணிகள்
தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழக உடுமலை கிளையில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன்பஸ்கள் 58-ம்என மொத்தம் 94 பஸ்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்கிறவர்கள் சிலர், வாடகை கார்களை ஏற்பாடு செய்து கொள்கின்றனர். குறிப்பிட்ட தூரம் மட்டுமே சென்று வர வேண்டியவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.அதனால் பஸ்களுக்கு பயணிகள் வருகை குறைந்துள்ளது.
வருவாய் குறைந்தது
அதனால் உடுமலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த தொடங்கிய கடந்த மாதம் (ஏப்ரல்) 20-ம் தேதிக்கு முன்பு வசூலான தொகையை விட தற்போது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுவதில் வெளியூர் செல்லும் பஸ்கள் 4 மற்றும் டவுன்பஸ்கள் 6 எனமொத்தம் 10 பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்த பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தனியார் பஸ்கள்
அதேபோன்று தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. உடுமலையில் வெளியூர் செல்லும்பஸ்கள் 9 மற்றும் டவுன் பஸ்கள் 19 என தனியார் பஸ்கள் மொத்தம் 28 உள்ளன.பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் 3 பஸ்களும், டவுன் பஸ்களில் 6 பஸ்களும்என மொத்தம் 9 பஸ்கள் இயக்கப்படவில்லை.
Related Tags :
Next Story