அம்மாபாளையம் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டன. திருமுருகன் பூண்டி பேரூராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அம்மாபாளையம் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டன. திருமுருகன் பூண்டி பேரூராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அனுப்பர்பாளையம்
அம்மாபாளையம் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டன. திருமுருகன் பூண்டி பேரூராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான காய்கறி கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் காய்கறி வாங்க வருவது வழக்கம்.
அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் காய்கறி கழிவுகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை தொடர்ந்து வந்தது.
கலெக்டர் உத்தரவு
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அம்மாபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 70 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கடைகளை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.
9 கடைகள் இடித்து அகற்றம்
இதை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சுந்தரவவேல் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பந்தப்பட்ட கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களுக்கு முன்னதாகவே அறிவித்து, சம்மதமும் பெற்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஊழியர்கள் அங்கு 9 கடைகளை பொக்லைன் கொண்டு முற்றிலுமாக இடித்து அகற்றியதுடன், அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதையொட்டி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், ராஜூ உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆக்கிரமிப்பிலும் இருந்த கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story