எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் கல்லூரியில் தபால் வாக்குகள் எண்ணும் பெட்டிகள் தயார்


எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் கல்லூரியில் தபால் வாக்குகள் எண்ணும் பெட்டிகள் தயார்
x
தினத்தந்தி 30 April 2021 10:29 PM IST (Updated: 30 April 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் கல்லூரியில் தபால் வாக்குகள் எண்ணும் பெட்டிகள் தயார்

திருப்பூர்
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் எல்.ஆர். ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையம் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக 8 சட்டமன்ற தொகுதிக்கு தேவையான தபால் ஓட்டுகளை பிரித்து எண்ணும் வகையிலான பெட்டிகள் நேற்று எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோல் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் கல்லூரியின் நுழைவு வாசலில் அமைக்கப்பட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமிநாசினி கொடுக்கப்பட்டு முககவசம் அணிந்தவர்களை, கொரோனா பரிசோதனை சான்றிதழை சரிபார்த்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க உள்ளனர்.

Next Story