ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு


ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 10:32 PM IST (Updated: 30 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

கோவை

சிகிச்சை மையங்களில் சேர்ந்தவர்களை விட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4½ மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனா வீரியம்

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உச்சத்தை தொட்டுள்ளது. கோவையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது கொடிசியா போன்ற சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்ட வர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் தற்போது நிலை முற்றிலும் வேறாக உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது

கடந்த ஆண்டு முதல் அலையின் போது 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 80 பேர் சிகிச்சை மையங்களில் சேர்ந்தனர். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

 தற்போது 2-வது அலையில் 100 பேர் பாதிக்கப்பட்டால் 60 சதவீதம் பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். 40 சதவீதம் பேர் சிகிச்சை மையங்களில் சேர்கிறார்கள். இதில் இருந்து தொற்றின் வீரியம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.

4½ மடங்கு அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் 1,290 பேர் சிகிச்சை பெற்றனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள தொற்று சிகிச்சை மையங்க ளில் மொத்தம் 2,395 படுக்கைகளில் 940 பேர் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


இதன் மூலம் சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டவர்களை விட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 4½ மடங்கு அதிகமாக அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பத்திரிகளில் சிகி ச்சை பெற்று வருபவர்கள் அனைவருமே நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

படுக்கை நிரம்பி வழிகிறது

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் உள்ள 3,583 படுக்கைகளில் 2,784 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதில் பி.எஸ்.ஜி., கே.எம்.சி.எச். போன்ற பெரிய தனியார் ஆஸ்பத்திரிக ளில் படுக்கைகள் காலி இல்லை. பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை நிரம்பி வழிகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முன்தினம் மொத்தம் 4,074 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story