பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கோவை
கோவை பீளமேடு அருகே எல்லை தோட்டம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் முத்துவேல் (வயது 22). பி.எஸ்சி. பட்டதாரி.
இவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை என்று மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வீட்டின் குளியல் அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முத்துவேல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story