திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் கைது


திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 10:43 PM IST (Updated: 30 April 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தேவரடியார் குப்பம் பகுதியில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டுகள் தாமோதரன், ராமச்சந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 146 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல்(வயது 30) என்பதும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக்கடைகள் மூடப்படுவதால் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடு்த்து சக்திவேலுவை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 


Next Story