கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 12 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 11 ஆயிரத்து 607 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 109 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்றால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகதுருகத்தை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கொரானாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 600 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 76 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,571 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story