விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2021 5:23 PM (Updated: 30 April 2021 5:23 PM)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த அனைவருக்கும் ஊதியம் வழங்கக்கோரி திருமருகல் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி:
100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த அனைவருக்கும் ஊதியம் வழங்கக்கோரி திருமருகல் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த அனைவருக்கும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை ரூ.273 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 
ஊதியம்
கொரோனா காலத்தில் வீட்டில் உள்ள 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின், போலகம் கிளை உறுப்பினர் காரல் மார்க்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் கணபதிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story