காதலிக்கும்படி பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்
கிணத்துக்கடவில் காதலிக்கும்படி பள்ளி மாணவிக்கு வாலிபர் தொல்லை கொடுத்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் காதலிக்கும்படி பள்ளி மாணவிக்கு வாலிபர் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவியுடன் காதல்
கிணத்துக்கடவு பெரியார் நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி காளீஸ்வரி (வயது 45). இவர்களுக்கு சந்தோஷ் குமார் (23), ராஜ்குமார் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி தனது கணவரை பிரிந்து தனது மகன்களுடன் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், ராஜ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. இதை அறிந்த மாணவியின் தந்தை கண்டித்து உள்ளார்.
கண்டித்தும் கேட்கவில்லை
இதனால் அவர் ராஜ்குமாரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த நிலையில் அவர் அந்த மாணவியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்து உள்ளார்.
அதை மாணவி ஏற்காமல் தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று காளீஸ்வரியிடம், உனது மகனை கண்டித்து வைக்கும்படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் அதை கேட்காமல் ராஜ்குமார் மீண்டும் அந்த மாணவியிடம் பேச முயன்றதாக தெரிகிறது.
தாய், சகோதரன் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர் என 4 பேர் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. காளீஸ்வரி மற்றும், சந்தோஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் 2 பேரையும் 4 பேர் சேர்ந்து அடித்து உதைத்ததுடன், பாட்டிலை எடுத்து சந்தோஷ்குமார் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் காயம் அடைந்த காளீஸ்வரி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், சந்தோஷ்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரி யிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண் கைது
இது குறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தாயை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story