நீலகிரி மலைரெயில் சோதனை ஓட்டம்


நீலகிரி மலைரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 30 April 2021 11:35 PM IST (Updated: 30 April 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்டிகளுடன் நீலகிரி மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சென்று திரும்பியது.

மேட்டுப்பாளையம்

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்டிகளுடன் நீலகிரி மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சென்று திரும்பியது. 

மலை ரெயில் 

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கொரோனா காரணமாக தற்போது மலை ரெயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இந்த ரெயிலில் பெட்டிகள் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. 

சோதனை ஓட்டம் 

மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் பெரிய அளவு கண்ணாடி மற்றும் சொகுசு இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதனால் இருக்கைகள் குறைக்கப்பட்டன. இவ்வாறு மாற்றி வடிவமைக்கப்பட்ட 28 ரெயில் பெட்டிகள் பல்வேறு காலகட்டங்களில் மேட்டுப் பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த ரெயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் பணிமனையில் ரெயில்வே தொழிலாளர்களால் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து  சோதனை ஓட்டம் நடந்தது. 

குன்னூருக்கு சென்று திரும்பியது

இதற்காக 4 புதிய பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட்டது. சேலம்கோட்ட முதுநிலை எந்திரவியல் மேலாளர் ராஜா, முதுநிலை பொறியாளர் அய்யனார், மேட்டுப்பாளையம் கோச் பொறியாளர் முகமது அஸ்ரப் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். 

மலைரெயில் பாதையில் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் குன்னூரை சென்றடைந்தது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு வந்தது. 

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story