நாமக்கல்லில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்; கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்; கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 April 2021 11:36 PM IST (Updated: 30 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.

நாமக்கல்:
நாமக்கல்லில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாளை காலை 7.55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் ரகசிய உறுதிமொழி ஏற்றுக்கொள்வார்கள்.
இதைத்தொடர்ந்து 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கும். இதில் ஈடுபட உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
நெறிமுறைகள்
கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஷோபா (நாமக்கல்), சாந்தா எல்.ஹல்மானி (சேந்தமங்கலம்), கோபால் ராம் பிர்டா (திருச்செங்கோடு), அனிதா (குமாரபாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து கலெக்டர் மெகராஜ் விளக்கி கூறினார். வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டு உள்ளதை நுண் பார்வையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story