மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
x
தினத்தந்தி 30 April 2021 11:48 PM IST (Updated: 30 April 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

நச்சலூர்
திருச்சி மாவட்டம், சிறுகமணி பேரூராட்சி, காவல்காரப்பாளையம் பனை மந்தைத்தெரு பகுதியை சேர்ந்தவா் வரதன் மனைவி பாப்பு (வயது 70). இவரது பேரன் மோகன்குமார் (20). இந்நிலையில் கடந்த 29-ந்தேதி மோகன்குமார் தனது பாட்டி பாப்புவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சொந்த வேலை காரணமாக விராலிமலைக்கு நங்கவரம்-நெய்தலூர்காலனி சாலை வழியாக சென்று உள்ளனர்.
அப்போது ஒத்தக்கடை சாலையில் தென்கடைக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாதவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், பாப்பு, மோகன்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.  இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாப்பு சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். மோகன்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து மோகன்குமார் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story