மாவட்ட செய்திகள்

கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு + "||" + Death

கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு
கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
க.பரமத்தி
கோவை மாவட்டம், காளப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவரது மனைவி மகேஸ்வரி (55). இந்த தம்பதியின் மகன் பிரதீப் (33). இவர் மும்பையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். பிரதீப்பின் மனைவி பிரதிபா (31). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் கோவையில் இருந்து ஒரு காரில் சென்று ஆறுமுகத்தின் 2-வது மகன் வெங்கடேஷ் என்கிற கார்த்திக்கின் திருமண பத்திரிக்கையை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு கொடுத்தனர். பின்னர் அதே காரில் 4 பேரும் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை பிரதீப் ஓட்டி வந்தார். 
சின்னதாராபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம், மகேஸ்வரி, பிரதீப் ஆகிய 3 பேரும் இறந்தனர். பிரதீப் மனைவி பிரதிபா படுகாயம் அடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரதிபாவும் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சின்னதாராபுரம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
2. சாலையில் தடுமாறி விழுந்து பெண் சாவு
காரைக்குடியில் நடந்து சென்ற பெண் சாலையில் தவறி விழுந்து இறந்தார்.
3. ஊருணியில் மூழ்கி சிறுமி பலி
காளையார்கோவில் அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலியானார்.
4. ெரயிலில் அடிபட்டு முதியவர் பலி
ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சிறுமி, தாய், பாட்டி ஒன்றாக தற்கொலை
சிறுமி, தாய், பாட்டி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.