சூதாடிய 7 பேர் கைது


சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 12:06 AM IST (Updated: 1 May 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேதுபதிநகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் எம்.எஸ்.கே.நகர் பாலகிருஷ்ணன் (வயது31), வானக்காரத்தெரு பெரியார் (40), நேருநகர் 5-வது தெரு செந்தில் (39), முத்து ராமலிங்க சுவாமிகோவில் தெரு காளிதாஸ் (42), எம்.எஸ்.கே. நகர் பாலமுருகன் (36), ஓம்சக்திநகர் நாகூர்கனி (36), முகம்மது ஜமீல் (44) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய ரூ.490-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story