டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்கள் கருகும் அபாயம்


டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்கள் கருகும் அபாயம்
x
தினத்தந்தி 30 April 2021 6:39 PM GMT (Updated: 30 April 2021 6:39 PM GMT)

மானாமதுரை அருகே டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்கள் கருகும் அபாய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

மானாமதுைர,

மானாமதுரை அருகே உள்ள கீழடப்பசளை கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதத்திற்கு ேமலாகி விட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை நம்பி அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இயங்குகின்றன. தற்போது டிரான்ஸ்பார்மர் பழுதால் பம்பு செட்டுகள் இயங்க முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால் அவை கருகும் அபாய நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே டிரான்ஸ்பார்மரை சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story