3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 May 2021 12:38 AM IST (Updated: 1 May 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கமுதி, 
கமுதி பகுதிகளில் கஞ்சா கடத்தல் கொலை முயற்சி திருட்டு வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கமுதி அடுத்துள்ள முத்துப்பட்டியை சேர்ந்த முத்தமிழ்ச் செல்வம் (வயது25), தாதாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மேழிச்செல்வம் (23) காணிக்கூரை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருவதால் இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத் தில் கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதற்கான உத்தரவு நகல் அவர்களிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story