பிச்சை எடுக்க பயன்படுத்திய குழந்தை மீட்பு


குழந்தை மீட்பு
x
குழந்தை மீட்பு
தினத்தந்தி 1 May 2021 12:52 AM IST (Updated: 1 May 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

பிச்சை எடுக்க பயன்படுத்திய குழந்தை மீட்பு

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் கிக்கானி பள்ளி சுரங்கப்பாதை அருகே இளம்பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.‌

 இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு விசாரித்தனர். அப்போது அந்த பெண், அது தனது சொந்த குழந்தை எனவும், குடும்ப வறுமை காரணமாக பிச்சை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 இதையடுத்து போலீசார் அந்த குழந்தை மற்றும் அந்தப் பெண்ணை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story