சிறுகனூர் அருகே எலிமருந்து தின்று இளம்பெண் தற்கொலை
சிறுகனூர் அருகே எலிமருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம், மே.1-
சிறுகனூர் அருகே உள்ள புதூர் உத்தமனூர் தேரடி வீதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34). விவசாயி. இவரது மனைவி நிகிதா (20). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை(விஷம்) எடுத்து தின்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நிகிதா மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில், நிகிதாவை அவருடைய கணவர் கொடுமை படுத்தியதாகவும், எனவே அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் சிறுகனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் பற்றி திருச்சி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story